தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 19, 2024 01:36 PM IST

Edappadi Palaniswami : இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்! (கோப்புப்படம்)
Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்! (கோப்புப்படம்)

Edappadi Palaniswami : தமிழகத்தால் கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

"கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.