’ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தோனி!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தோனி!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

’ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தோனி!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Kathiravan V HT Tamil
Published Jun 10, 2025 12:34 PM IST

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

’ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தோனி!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
’ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தோனி!’ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

இது தொடர்பாக “எக்ஸ்” வலைத்தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ள இடுகையில்,

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தோனி ஒரு உண்மையான கிரிக்கெட் ஜாம்பவான் என்று புகழ்ந்த எடப்பாடி, அவரது தலைமைப் பண்பு, அமைதியான அணுகுமுறை மற்றும் ஆட்டத்தை முடிக்கும் திறமை ஆகியவை கிரிக்கெட்டில் புதிய அளவுகோல்களை அமைத்ததாக குறிப்பிட்டார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது முதல் 2011 உலகக் கோப்பையை ஒரு சிக்ஸருடன் முடித்தது வரை, தோனியின் பங்களிப்பு கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கௌரவம், அமைதியுடன் தலைமை தாங்கி, மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தி, இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பொற்காலத்தை வழங்கிய தோனிக்கு பொருத்தமான அங்கீகாரம் என்று எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.