‘ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
‘0 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?’

‘ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை.
It's in complete #MuteMode ! பச்சைத் துண்டுடுத்தும் விவசாயியை, தன் உயிரை விடத் துணிய வைத்த ஸ்டாலின் அரசு, தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. மேலும், ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாக செய்திகள் வருகின்றன.