‘தஞ்சை மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ஊழல்..’ ஆர்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!
‘மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களை ஆதாய நோக்கத்துடன் வணிக நிறுவனம் மற்றும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கும் செயலில் திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்’

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி `ஒரு குடும்ப ஆட்சி’ என்று நான் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறேன். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் நலன் சார்ந்தே செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
`முன்னேர் எப்படியோ, பின்னேரும் அப்படியே’ என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் பணியாற்றுவதற்காக பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்தவர்கள், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையில், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டு வருவதோடு, பல்வேறு மக்கள் விரோதச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தில், அதிகாரப் பதவியில் அமர்ந்துள்ள திமுக-வைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள்; அதிகார துஷ்பிரயோகங்கள் பின்வருமாறு:
