போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சி.. 80 வயது மூதாட்டிக்கு பாலியல் கொடுமை.. இபிஎஸ் கண்டனம்
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி கடலூர் மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான குமரவேல் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். குண்டு காயத்துடன் பிடிபட்ட குமரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80 வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!
ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.