EPS: தமிழ்நாடு சட்டமன்றம், திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல.. எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா? - இபிஎஸ் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: தமிழ்நாடு சட்டமன்றம், திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல.. எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா? - இபிஎஸ் சரமாரி கேள்வி!

EPS: தமிழ்நாடு சட்டமன்றம், திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல.. எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா? - இபிஎஸ் சரமாரி கேள்வி!

Karthikeyan S HT Tamil
Jan 09, 2025 12:26 PM IST

EPS: "தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல." - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

EPS: தமிழ்நாடு சட்டமன்றம், திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல.. எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா? - இபிஎஸ் சரமாரி கேள்வி!
EPS: தமிழ்நாடு சட்டமன்றம், திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல.. எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா? - இபிஎஸ் சரமாரி கேள்வி!

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்," சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா மு.க.ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? "#யார்_அந்த_SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?

மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!." இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

திரும்பாத கேமராக்கள்

தமிழக சட்டப்பேரவையின் 4 ஆம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி பதில் நேரத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதற்கிடையில், அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியபோது நேரலையில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கருப்புச் சட்டையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரலையில் காட்டப்படவில்லை. அமைச்சர்கள் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பும்போது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவர் பேசிய குரல் மட்டும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?

சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தங்கள் எம்எல்ஏக்களை சட்டசபை கேமராக்களில் காண்பிக்கவில்லை என நேற்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், “ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.