‘சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி..’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி..’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!

‘சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி..’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 29, 2025 12:42 PM IST

‘அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!’

‘சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி..’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!
‘சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி..’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!

கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி! போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!

ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே ஃபெயிலியர். இதில் இன்று Version 2.0 Loading ஆம்! அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!

2026-ல் ஒரே version தான் -அது அதிமுக version தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin என்று சொல்லும்போது, தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி ஸ்டாலின் அவர்களே’’ என்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை விமர்சித்த முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், இன்று தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற்றது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்து சென்றது” என்று பேசி இருந்தார்.

அவைக்குறிப்பில் நீக்ககோரி அமளி

தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்த உடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், ”முதலமைச்சர் பேசும்போது ஊர்ந்து என்ற சொல்லை பயன்படுத்தினார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பார்ட்-2 என்று எது வந்தாலும் தோல்வி அடைந்து உள்ளது. உதாரணமாக இந்தியன் - 2 படம் தோல்வி அடைந்து உள்ளது. அதே போல் திராவிட மாடல் 2.0வும் தோல்வி அடையும்” என்றார். ஊர்ந்து என்ற சொல்லை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யக் கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.