ED Raid: ஆண்டாள் ஆறுமுகத்தின் 1000 கோடி சொத்துக்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை அதிரடி!
சோதனையின் போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும், ரூ. 912 கோடி மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்.கே.எம் பவர்ஜென் லிமிட்டெட் (RKMPPL) நிறுவனத்தின் ஆண்டாள் ஆறுமுகம் உள்ளிட்டோரின் 1000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.
PMLA 2002 சட்டவிதிகளின் படி ஆர்.கே.எம் பவர்ஜென் லிமிட்டெட் (RKMPPL) நிறுவனத்தில் அமலக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பகுதியாக, திருமதி ஆண்டாள் ஆறுமுகம் மற்றும் எஸ். ஆறுமுகம் மற்றும் பிறருடன் தொடர்புடைய இடங்களை குறிவைத்து, சென்னையில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனையின் போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும், ரூ. 912 கோடி மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
