'வெறும் 6 மாதத்தில்…! 450 கோடி! 4 படங்கள்! இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!
”சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ (200 கோடி பட்ஜெட்), தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ (100 கோடி பட்ஜெட்), மற்றும் சிலம்பரசன் நடிக்கும் பெயரிடப்படாத படம் (150 கோடி பட்ஜெட்) ஆகிய மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது”

சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று முக்கிய திரைப்படங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பெருந்தொகை முதலீட்டின் மூலாதாரம் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தால் பரபரப்பு
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, அப்போது வரை பெரிதாக அறியப்படாத ஆகாஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதை வெளியுலகிற்கு உணர்த்தியது. திருமணத்திற்கு இவ்வளவு பிரபலங்கள் வருகை தந்தது அப்போது பலருக்கும் கேள்விகளை எழுப்பியிருந்தது.