School Holiday: கனமழை எதிரொலி! 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-due to heavy rains schools in madurai dindigul and coimbatore have been declared holiday today - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Holiday: கனமழை எதிரொலி! 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School Holiday: கனமழை எதிரொலி! 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Kathiravan V HT Tamil
Nov 09, 2023 07:43 AM IST

”மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், குமரி பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது”

கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரியில் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரியில் விடுமுறை அறிவிப்பு

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், குமரி பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர்,திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.