School Holiday: ’கனமழை எதிரொலி! 7 மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பு!’
“மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு”
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்ச் லார்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதே வேளையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை 8.30 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.