தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dry Weather Is Likely To Prevail In Tamil Nadu For The Next 6 Days

Weather Upadate: மக்களே அடுத்த 6 நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.. வெப்பநிலை இயல்பைவிட அதிகம் இருக்குமாம்!

Divya Sekar HT Tamil
Mar 07, 2024 07:06 AM IST

இன்று முதல் 12.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
வறண்ட வானிலை (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 12.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்