தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dravidian Movement Pioneer, Aiadmk Former Minister Sds Somasundaram Centenary Function Aiadmk General Secretary Eps Speech

’1991இல் நான் MLA-வாக இருந்தபோது’ SDS நூற்றாண்டு விழாவில் ப்ளாஷ்பேக் பேசிய EPS!

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 07:53 AM IST

SD Somasundaram Centenary:- 1991ல் நான் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக இரண்டாம் முறையாக தேர்தெடுக்ககபபட்டபோது, அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்களோடு பணியாற்றிய காலங்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

எஸ்.டி.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
எஸ்.டி.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த எஸ்.டி,எஸ் நூற்றாண்டு விழா
சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த எஸ்.டி,எஸ் நூற்றாண்டு விழா

இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நம்மை எல்லாம் ஆளாக்கிய பொன்மனச்செம்மல் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களை அன்றைய சர்வாதிகார ஆட்சியாளராக இருந்த கருணாநிதி நீக்கிய போது தமிழக மக்கள் மட்டுமல்ல நம் தலைவருக்கு தோளோடு தோளாக நின்றவர்களில் முதன்மையானவர் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த அண்ணன் எஸ்.டி.எஸ் என்கிற திரு. எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள்.

புரட்சித்தலைவர் அவர்கள் அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்து, திண்டுக்கல் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை புரட்சித்தலைவர் தேர்ந்தெடுக்க வழிகோலியவர்களில் அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்களும் ஒருவர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்திற்கு தலைமையேற்றப் பிறகு, 1989ல் திமுக ஆட்சியின் போது நடைபெற்ற மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைத்தேர்தல்களில் இயக்கம் வெற்றிவாகை சூடுவதற்கு உழைத்தவர்களில் முன்னோடியாக இருயத திரு. எஸ்.டி.எஸ் அவர்களின் அரசியல் மேலாண்மையை உரைக்கும் வகையில் நடைபெறும் இன்று எஸ்.டி.எஸ் குடும்பத்தார் கொண்டாடும் இவரது நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்று திராவிட மாணவர் இயக்கத்தை துவக்கிய அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்கள் கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக திமுக தலைமை நடவடிக்கைகள் மேற்கொண்டபோது அதை எதிர்த்து புரட்சித்தலைவரின் பின்னால் அணிவகுத்தவர்.

அறிஞர் அண்ணா அவர்கள் மாணவர் உலகத்தையும், இளைஞர்களையும் ஈர்க்கத்தக்க வகையில் தனது கொள்கை பரப்புத் திட்டங்களைச் செம்மையாக கொண்டு செல்ல கல்லூரிகள், பள்ளிகள் போன்ற கல்வி நிலையங்களில் திராவிட மாணவர் அமைப்பு உருவெடுக்க முன்னோடியாக இருந்தவர் அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்கள்.

அப்படி மாநிலம் தழுவிய அளவில் அமைக்கப்பட்ட திராவிட மாணவர் அமைப்புக்கு பொது செயலாளராக நீண்ட காலம் திறம்பட பணியாற்றினார் அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்கள். அக்காலக்கட்டங்களில் இயதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றவர் அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்கள்.

நமது இயக்கம் தொடங்கப்பட்டவுடன் புரட்சித்தலைவர் அவர்களால் கழகத்தின் முதல் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

புரட்சித்தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் வருவாய்த்துறை மூலம் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருயதவர் அண்ணன். எஸ்.டி.எஸ் அவர்கள்.

புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு நம்மை காத்து நின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த பெருமைக்கும் உரியவர்.

1977-1983 காலக்கட்டங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவருடைய அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும், 1991ல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அமைச்சரவையிலும் வருவாய்த் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர்.

1991ல் நான் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக இரண்டாம் முறையாக தேர்தெடுக்ககபபட்டபோது, அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்களோடு பணியாற்றிய காலங்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்களுடைய அரசியல் பணியும், ஆட்சிப் பணியும் போற்றுதலுக்குரியதாகும். இன்றைய சூழ்நிலையில் அண்ணன் அவர்களின் தியாகத்தையும், பெருமைகளையும் பறை சாற்றும் வகையில் இப்படியொரு விழா எடுக்கப்பட்டிருப்பதும், நம் தலைவருக்கு உறுதுணையாக இருயத அவருக்கு அவருடைய குடும்பத்தினர் நடத்தும் இயத விழாவில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

குறிப்பாகவும், சிறப்பாகவும் சொல்ல வேண்டுமென்றால் புரட்சித்தலைவரால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் காக்கப்பட்ட இயத இயக்கத்தின் 6வது பொதுச் செயலாளராக பொறுப்பேற்றபின் நான் பங்கேற்கும் முதல் விழா இது என்பதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கு துவக்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை நம்முடைய இதய தெய்வங்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் உறுதுணையாக இருயத அண்ணன் எஸ்.டி.எஸ் அவர்களின் பெயர் நிலை நிற்கும் வகையில் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதுரையில் புரட்சித்தலைவர் நடத்திய உலக தமிழ் மாநாட்டிற்கு பிறகு, 1995ம் ஆண்டு நம்மை காத்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின்போது நடத்திய 8வது உலகத் தமிழ் மாநட்டை முன்னின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் அண்ணன் எஸ்.டி.எஸ்.

அந்த மாநாடு சோழ மண்டலத்தையே நம் இயக்கத்தின், நம் ஆட்சியின் பெருமையை உணரும் வகையில் நடந்தது. தஞ்சை தரணிக்கு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் அயத மாநாட்டின் மூலம் ஏற்படுத்தித்தரப்பட்டது. இதற்கு வித்திட்டவர் அண்ணன் எஸ்.டி.எஸ்.

இன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர், அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மக்களுக்கான பேரியக்கம், எத்தனை வஞ்சகமான சூழலுக்கு மத்தியில் வளர்ந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்கிறது. எத்தனை தந்திரங்களை தன் நல்ல எண்ணங்களால் முறியடித்திருக்கிறது என்பதையும் விளக்குகிறது என பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்