Doctor Suicide : சுற்றுலா வந்த டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை.. என்ன காரணம்?
நெல்லையில் தங்கும் விடுதி அறையில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : வண்ணார்பேட் டையில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஒருவர் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அவர் நேற்று காலை வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் பாளை யங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். அறையின் கதவை தட்டிய போது, உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு அந்த நபர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
பின்னர் அவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர் ஆந்திர மாநிலம் பிரகதிநகரை சேர்ந்த ஜிதேந்திர நாயுடு (32) என்பதும், மருத்துவரான அவர் தனது உறவினர் மணீஸ் பூஷன் உள்பட 3 பேருடன் ஆந்திராவில் இருந்து காரில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
மேலும் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவில் மதுரை வந்த அவர்கள் காரில் தூங்கி உள்ளனர். அப்போது ஜிதேந்திர நாயுடு திடீரென மாயமான தால் மணீஸ்பூஷன் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததும் தெரியவந்தது.
தற்கொலைக் கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் அவரது உறவினர்கள் வந்த பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)