தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Do You Know What The Influenza Prevention Guidelines Are?

Influenza: இன்புளுயன்சா காய்ச்சல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 15, 2023 10:03 AM IST

மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிதல் அவசியம்.

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்
இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் H3N2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் இந்தியாவில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

இன்புளுயன்சா தொற்று அண்மை காலமாக வேகமாக பரவி வருகிறது. பருவ காலங்களில் அதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அறிகுறிகள், நோயின் தீவிரத்தைப் பொருத்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவா்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிா் மருந்துகளும் அவா்களுக்கு அவசியமில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. அதேவேளையில், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தேவையின் அடிப்படையில் ஓசல்டாமிவிா் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் உட்கொள்ளலாம். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டும்.

மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிதல் அவசியம். அதேபோன்று மருத்துவத் துறையினா், கா்ப்பிணிகள், சுவாச நோய் பாதிப்புகளுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி முக்கியம். நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்