‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி!
‘உரிய வகையில் அனைத்துக்கும் பதிலளித்தும் செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை எப்போதும் சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியும் நிர்பந்தமும் கே.பி.க்கு இருக்கலாம்’

‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி! (Murasoli)
திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலியில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதோ இன்று முரசொலி வெளியிட்டுள்ள செய்தி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை!
தீனி போடத் தொடங்கியிருக்கும் கே.பி
‘தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது.

