’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
“தன்னைப் போல் 15 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மன்றாடியுள்ளார். தன்னைத் தாக்கிய காயங்களைச் செய்தியாளர்களிடம் காண்பித்தும் அழுதார்”

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் தெய்வசெயல் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகக் கல்லூரி மாணவி ஒருவர் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். தனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதாகக் கூறி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் விவரங்கள்
21 வயதாகும் பாதிக்கப்பட்ட மாணவி, அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல் (40) தன்னை காதலிப்பதாக ஏமாற்றி, ஏற்கனவே திருமணமாகியும் கடந்த ஜனவரி 31 அன்று சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது பெற்றோரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியே தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் (மார்ச் மாதம் வரை) சுமூகமாகச் சென்ற நிலையில், திடீரென தெய்வசெயல் தன்னை திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு "இரையாக்க" முயற்சி செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னை தினமும் கடுமையாகத் தாக்கியதாகவும், உடம்பெல்லாம் கடித்து துன்புறுத்தியதாகவும், காயங்கள் இருப்பதாகவும் மாணவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.