தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Youth Wing Conference Date Announced

DMK : திமுக இளைஞரணியின் மாநில மாநாடு தேதி அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
Jan 06, 2024 11:23 AM IST

திமுக இளைஞரணி மாநாடு வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி மாநாட்டுக்கான தேதி அறிவிப்பு
திமுக இளைஞரணி மாநாட்டுக்கான தேதி அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21-ந்தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், “ 'மிக்ஜாம்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த மாதமே நடைபெறவிருந்தது. மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று திமுக மாநில இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

ஆனால் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை இளைஞரணி மாநாடு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்