தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Vs Annamalai: Annamalai Exposes 'Tamil Nadu As Hub Of Drug Trafficking'

DMK Vs Annamalai: 'போதைப்பொருள் கடத்தலின் மையமான தமிழகம்' திமுக மீது குற்றம் சாட்டிய அண்ணாமலை

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 01, 2024 09:36 AM IST

திமுக ஆட்சியில் போதைப்பொருளின் மையமான தமிழகம் மாறி உள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

'போதைப்பொருள் கடத்தலின் மையமான தமிழகம்'
'போதைப்பொருள் கடத்தலின் மையமான தமிழகம்'

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் கூறியதாவது, ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் பேசுவதற்காக இந்த வீடியோ பதிவு. கடந்த 10 நாட்களாக பல அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா, சிந்தடிக் டிரக்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக எல்லா இடத்திலும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை எனது என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் போது நிறைய தாய்மார்கள் என்னிடம் புகாராக தெரிவித்தனர். பட்டி, தொட்டியெல்லாம் கிராமத்திலும் பரவிவிட்டது. இதனை பெரும் முயற்சி எடுத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறினர்.

திமுக அரசு காலத்தில் கடந்த 33 மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு டிரக்ஸ் புழக்கம் தமிழகத்தில் அதிகமாகிவிட்டது. கடந்த 10 நாட்களாக வந்த செய்தி நமக்கு ஒரு ஊர்ஜீதத்தை கொடுக்கிறது.

இந்த போதை பொருள், அரசியல், சினிமா ஆகிய தொடர்புகளை தாண்டி வெளிநாட்டு தொடர்புகள் மூலம் பரவியுள்ளது என்பதை செய்திகள் காட்டுகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் அயலக அணி பொறுப்பாளராக இருந்தார். அதே ஜாபர் சாதிக் ஒரு சினிமா நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பெரிய டிராக்ஸ் நெட் வொர்க் நிறுவன கும்பல் தலைவராக இருந்தார்.

சமீபத்தில் டில்லி சிறப்பு போலீசாரும், நார்கோ டிரக்ஸ் கண்ட்ரோல் போலீசாரும் இணைந்து 4 பேரை பிடிக்கின்றனர். 3500 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய நபராக ஜாபர் சாதிக்கை தேடி வருகின்றனர்.

இதில் 45 கன்சைன்ட்மென்டில் உலர் தேங்காயில் வைத்து இயற்கையாக கிடைக்க கூடிய சிந்தடிக் டிரக்சை வைத்து அனுப்புகிறார்கள். மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சூடோ எபிட் என்ற சிந்தடிக் டிரக்ஸை பயன்படுத்தி உலகத்தில் அதிகவிலை இருக்க கூடிய மெட்டா ஆம்பிடமைன் என்ற பொருளை உற்பத்தி செய்கிறார்கள். இதன் மதிப்பு ரூ. 1500 கோடி ஆகும்.

இப்படி ஒரு நெட் வெர்க்கை இந்தியாவில் தமிழகத்தில் தி.மு.க, அயலக அணியில் உள்ள குறிப்பாக சினிமா துறையில் உள்ள ஜாபர் சாதிக் தி.மு.க., குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். முதல்வர் குடும்பத்தினர் ஜாபர் சாதிக் நிறுவனத்தில் இருக்கக்கூடிய பாடல் வெளியிட்டு விழாவில் பங்கேற்கின்றனர். இந்த குற்றச்சாட்டு வந்த பிறகு உதய நிதி ஸ்டாலின் போட்ட டுவிட் பதிவை டெலிட் செய்கின்றனர்.

அயல் அணி என்ற பொறுப்பை பயன்படுத்தி இது போன்ற நெட்வொர்க்கை பயன்படுத்தி போதை பொருளை அனுப்புகின்றனர்.

இதேபோல் குஜராத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரானில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேருக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. அதில் 3110 கிலோ ஹஷிஸ், மற்றும் 158 கிலோ மெட்டாஆம்பிடமைன் மற்றும் 24 கிலோ ஹெராயின் என மொத்தம் 3300 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடைய மதிப்பு 1200 கோடியாகும். இது எந்த அளவிற்கு இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் சங்கிலியில் தமிழகம் மையப்புள்ளியாக உள்ளது என்பதை காட்டுகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய சில நபர்கள் எவ்வளவு பெரிய கெட்ட பெயரை நமது தமிழகத்திற்கு வாங்கி கொடுக்கின்றனர்.

இந்த ஜாபர் சாதிக் காவல்துறை டி.ஜி.பி. கையால் விருது வாங்குகிறார். இவரை எந்த போலீசார் கைது செய்வார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் கூரியர் நிறுவனத்தில் நார்கோ டிரக்ஸ் போலீசார் ரெய்டு நடத்தியுள்ளனர்.

இதையெல்லாம் அரசு கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. இதற்கு ஒரே தீர்வாக அரசியல் ரீதியாக பா.ஜ., கட்சி தான், பிரதமர் மோடி உள்ளார். என்.சி.பி.யை உஷார் படுத்தியுள்ளோம். போதை பொருளை பறிமுதல் செய்தது மத்திய அரசு, மத்திய அரசின் நிறுவனம்.

எனவே நம்முடைய வீட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடைய பொறுப்பு. இதனை அரசியல் ரீதயாக பா.ஜ.க முன்னெடுக்கிறது. ஒரு தனி மனிதாக நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோ பதிவு.

எல்லா பக்கங்களிலும் போதை பொருள் ஊடுருவிவிட்டதால் தினசரி பேப்பரை படித்தால், எப்படி எப்படியெல்லாம் கடத்துகின்றனர் என்பதை முன்னாள் போலீஸ் அதிகாரியாக என்னால் கண்டுபிடிக்க முடிகிறது.

எனவே நாம் அனைவரும் இணைந்து களத்தில் இறங்கிய வேண்டிய நேரம் இது. நாம் இந்த போதை பொருளை ஒழிக்க வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டுகள் மாணவர்களாக படித்துவருபவர்களை கண்காணிக்க வேண்டும். இதனை மாநில அரசு செய்யாமல் செயல் இழந்துவிட்டது. இதிலிருந்து நாம் நம் தமிழகத்தை மீட்டெடுப்போம். வரும் காலத்தில் பா.ஜ., முழுமையாக உங்களோடு தமிழகம் முழுவதும் களமிறங்கி பணியாற்றும். இப்பிரச்னைக்கு ஒரு தீர்வை காண்போம். நிச்சயமாக நீங்கள் அனைவரும் நம்மோடு சேர்ந்து செயல் படுவீர்கள் என்று நம்புகிறோம் வணக்கம்." என பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்