‘இரண்டு அயோக்கிய தற்குறிகள்.. அவன் பேரையெல்லாம் சொல்லி..’ திமுக மேடையில் முழங்கிய தமிழன் பிரசன்னா!
‘அம்பேத்கரை திராவிட இயக்கங்கள் ஏன் மேடை ஏற்றவில்லை என்று அந்த அயோக்கிய தற்குறிகள் கேட்கிறார்கள். வார்த்தையை அடியாக கவனியுங்கள். நான் எவன் பெயரையும் குறிப்பிடவில்லை. அவன் பெயரையெல்லாம் சொல்லி, எங்கள் மேடையை கொச்சைப்படுத்தவும் நான் விரும்பவில்லை’

திமுகவின் செய்தி தொடர்பாள தமிழன் பிரசன்னா, பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘சேலம் ஓமலூரில் ஒரு நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த போது, எல்லாரும், ‘பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. அவர் பேச்சை பார்த்தீங்களா.. உங்களுக்கு கோபம் வரலையா? நீங்க எப்படி பேசாமல் இருக்கீங்க’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன், ‘நாளைக்கு ஒரு பொதுக் கூட்டம் இருக்கு, நான் அங்கு பதில் சொல்லிக் கொள்கிறேன்’ என்று கூறினேன். அதில் இரண்டு பேர் பேசியிருக்கிறார்கள். அந்த இரண்டு பேரும் யார் என்றால், தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கிற தற்குறிகள். புதிதாய் முளைத்திருக்கிற தற்குறிகள். அந்த தற்குறிகள் பேசிய ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் நான் பதிலளிக்கிறேன்.
அயோக்கிய தற்குறிகள் இருவர்
அம்பேத்கரை திராவிட இயக்கங்கள் ஏன் மேடை ஏற்றவில்லை என்று அந்த அயோக்கிய தற்குறிகள் கேட்கிறார்கள். வார்த்தையை அடியாக கவனியுங்கள். நான் எவன் பெயரையும் குறிப்பிடவில்லை. அவன் பெயரையெல்லாம் சொல்லி, எங்கள் மேடையை கொச்சைப்படுத்தவும் நான் விரும்பவில்லை. அந்த தற்குறிகளுக்குச் சொல்கிறேன், அம்பேத்கர் என்பவர் யார்? அவரை எந்த இடத்தில் அடையாளம் காட்டியது என்றால், வேறு எந்த மாநிலமும் அம்பேத்கரை தொட பயந்த போது, இந்தியா முழுவதுக்கும் முதல் முன்னுதாரணமாக, அம்பேத்கர் என்கிற பெயரை தமிழ்நாட்டில் வைத்தது திமுக, கருப்பு சிவப்பு, உதயசூரியன், டாக்டர் கலைஞர். யாருக்கிட்ட போய் அம்பேத்கர் பேரு? மேடை ஏத்தவில்லையாம்!