தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Plans To Win Erode East Through Tirumangalam Formula - Aiadmk Ex-minister Jayakumar Interview

ஈரோடு கிழக்கில் திருமங்கலம் ஃபார்முலா! கோதாவில் இறங்கிய ஜெயக்குமார்!

Kathiravan V HT Tamil
Jan 25, 2023 08:49 PM IST

’’ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகியோர் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருக்கின்றனர்’’

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ( கோப்பு படம்)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ( கோப்பு படம்) (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் அண்ணா

இதனை தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 1967ஆம் ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் இந்தி திணிப்பு ஆதிக்கம் அதிகமாக இருந்த வேளையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டனர். மேலும் பேரறிஞர் அண்ணா தமிழுக்காகவே வாழ்ந்து வந்தவர் மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றும் தெரிவித்தார். 

’’திக்கு தெரியாத காட்டில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன்’’

எங்கள் ரத்தத்தில் தமிழ் தமிழ் என ஊறி இருப்பதாக கூறி தமிழை அழிக்கும் விதமாக தற்போது ஆளும் விடியா திமுக அரசு இருந்து வருவதாக கூறிய அவர், அவ்வப்போது சசிகலா மீண்டும் அதிமுக என் வசம் என கூறி எப்பொழுதுமே தலைமறைவு ஆகி கொள்வார் என தெரிவித்தார். திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவரும் இருந்து வருவதாக கூறிய அவர்,  தற்போது இருக்கும் அதிகாரிகள் ஆளும் கட்சிகளுக்கு துதிப்பாடும் நிலைமை இருந்து வருவதாகவும் எதிர்காலத்தில் அதற்கு எல்லாத்திற்கும் பதில் சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும் எனக் கூறினார். 

’’திருமங்கலம் ஃபார்முலா’’

தமிழக ஆளுநரையே இலக்காரமாக பேசக்கூடிய கேவலமான ஆட்சியை இந்த ஆளும் கட்சி நடத்தி வருவதாகவும் மேலும் தற்போது இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் ரவுடிகளை போல் கற்களை கையில் எடுத்துக் கொண்டு அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து திமுக வெற்றி பெற கனவு காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்