TOP 10 NEWS: ’உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இளையராஜா சர்ச்சை! ஆதவ் அர்ஜூனா பேட்டி!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் கருவறை அருகே சென்ற இளையராஜாவை வெளியேற சொன்னதால் சர்ச்சை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.பாஜகவுக்கு பெருமான்மை இல்லை
மாநிலங்கள் உரிமையை இழந்த பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும். நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பாஜக முயற்சி செய்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
2.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதுமேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
3.புதிய காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள புதிய காலணி உற்பத்தி ஆலைக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தைவான் நாட்டை சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம் இந்த ஆலையை அமைப்பதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
4.குகேஷுக்கு உற்சாக வரவேற்பு
உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று சென்னை திரும்பிய செஸ் வீரர் குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5.திருமாவுக்கு அழுத்தம் தரவில்லை
திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் தரவில்லை. நட்பைத் தாண்டி சகோதர பாசத்துடன் பழகக் கூடியவர் திருமாவளவன் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்.
6.விஜய் கட்சியில் இணைகிறேனா?
எங்கு இணைகிறேன் என்பதை விட, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறேன். எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன் என தவெகவில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆதவ் அர்ஜூனா பதில்.
7.தஞ்சாவூரில் ரயில் மறியல்
பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக் கோரி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.
8.முருங்கைகாய் விலை கிடுகிடு உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கை காய் விலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
9.இளையராஜாவை வெளியேற சொன்னதால் சர்ச்சை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை அருகே இசையமைப்பாளர் இளையராஜா சென்ற போது வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் வெளியேற சொன்னதால் சர்ச்சை.
10. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உள்ளனர் என விளக்கம்.
டாபிக்ஸ்