’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் இவ்வளவு பிரச்னைகள் வருமா?’ திருச்சி சிவா பேட்டி!
அப்படி இல்லாத பட்சத்தில் நான் சொன்னதை போல் எதிர்காலத்தில் அரசியல் சட்டத்தில் திருத்தம் வரலாம். புதிய மசோதாக்கள் வரலாம். இதில் நாங்கள் எவ்வளவுதான் இணைந்து நின்றாலும், அந்த குரல் எடுபடாது. அதனால் எண்ணிக்கைகள் குறையக் கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக உள்ளோம்.

அமித்ஷா அவர்கள் குறையாது என்று சொன்னாலும், அதன் வழிமுறைகளை இன்னும் விளக்கவில்லை. அதன் வழிமுறைகளை சொன்னால்தான் அடுத்து எங்களின் நகர்வு பற்றி சொல்வோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்பவும், 7 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து குரல் எழுப்பவும் எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க:- ’ராஜ்யசபா சீட்! அதிமுக கூட்டணியில் மன வருத்தமா?’ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்!
திருச்சி சிவா பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, அமித்ஷா அவர்கள் குறையாது என்று சொன்னாலும், அதன் வழிமுறைகளை இன்னும் விளக்கவில்லை. அதன் வழிமுறைகளை சொன்னால்தான் அடுத்து எங்களின் நகர்வு பற்றி சொல்வோம். யார் எந்த மாநிலத்திற்கு செல்வது பற்றி முடிவு எடுக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரச்னை எழுப்புவது பற்றி பேசி உள்ளோம். ஒத்த கருத்து உடைய தென்மாநில எம்பிக்கள் உடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அரசின் கவனத்தை ஈர்போம். அரசு வைத்துள்ள தீர்வு என்ன என்பதை நாங்கள் கேட்போம். எங்கள் கவலை மட்டுமல்ல; உடனடியாக பரிகாரம் வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.
மேலும் படிக்க:- ’விஜய் இதை செய்தால் 2026இல் ஆட்சி அமைப்பது உறுதி!’ தவெக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா!
எண்ணிக்கை குறைய கூடாது என்பதில் கவனம்
இது மாநிலம் சம்பந்தப்பட்டது. தென் மாநிலங்கள் என்று சொலும் போது இந்தியா கூட்டணியில் நிறையபேர் உள்ளார்கள். அவர்களும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் எங்களோடு ஒத்துழைப்பார்கள். ஒரு பகுதி இந்தியாவில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு எந்த வகையிலும் நடத்தப்படக் கூடாது. பிரதிநிதித்துவம் என்பது நாடாளுமன்றத்தில் நியாயமாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் நான் சொன்னதை போல் எதிர்காலத்தில் அரசியல் சட்டத்தில் திருத்தம் வரலாம். புதிய மசோதாக்கள் வரலாம். இதில் நாங்கள் எவ்வளவுதான் இணைந்து நின்றாலும், அந்த குரல் எடுபடாது. அதனால் எண்ணிக்கைகள் குறையக் கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக உள்ளோம்.
நியதியும், நியாயமும் என்னவோ
2026இல் தொகுதி சீரமைப்பு நடக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. 1976, 2001ஆம் ஆண்டுகளில் தொகுதி சீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே 2026 தொகுதி மறுசீரமைப்பு நடந்தாக வேண்டும். மக்கள் தொகை மிக அதிகமாக கூடிவிட்டது. இதனால் ஏற்கெனவே எடுத்த முடிவின்படி தொகுதி மறுசீரமைப்பை செய்ய வேண்டும். நடைமுறையும், நியதியும், நியாயமும் என்னவோ, அந்த அடிப்படியில்தான் நாங்கள் பேசுகிறோம்.
