தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Mp Pudukkottai Mm Abdulla Denied Reports That He Went To Kenya With Jaffer Sadiq

Jaffer Sadiq: ஜாபர் சாதிக் உடன் கென்யா சென்றேனா? சவுக்கு சங்கரை விளாசும் எம்.எம்.அப்துல்லா!

Kathiravan V HT Tamil
Mar 05, 2024 03:04 PM IST

”செய்தியை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது தொடுக்க இருக்க கிர்மினல் டெஃபமேஷன் முடிவில் கோர்ட்டில் தெரியும் எது உண்மை எது பொய்னு!!”

ஜாபர் சாதிக் உடன் தொடர்புபடுத்தி பேசப்படுவது தொடர்பாக திமுக எம்.பி, எம்.எம்.அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்
ஜாபர் சாதிக் உடன் தொடர்புபடுத்தி பேசப்படுவது தொடர்பாக திமுக எம்.பி, எம்.எம்.அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்

ட்ரெண்டிங் செய்திகள்

தயாரிப்பாளராகவும், திமுக அயலக அணியில் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டது டெல்லி போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு தேங்காயில் 50 கிலோ போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனத்தை வைத்து கடத்திய வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான செய்தி வெளியான உடன் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜாபர் சாதிக்கை நீக்குவதாக அக்கட்சி அறிவித்தது.

மேலும் மைலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைத்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் தற்போது கென்யாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் நடத்தி வரும் சவுக்கு மீடியாவில் வெளியிட்ட செய்தியில், ஜாபர் சாதிக் கடந்த ஜனவரி மாதம் கென்யா சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவருடன் யார் யார் சென்றனர் என விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக அயலக அணி கூட்டத்திற்காக ஜாபர் சாதிக் உடன் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா கென்யா சென்றது தெரிய வந்துள்ளது என பதிவிடப்பட்டு இருந்தது.

இந்த செய்தியை பகிர்ந்த அதிமுக ஐடி விங்கை சேர்ந்த சிடி நிர்மல் குமார், இது உண்மையா? என திமுக எம்.பி. அப்துல்லாவை ட்விட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அப்துல்லா, ”ஏன்ணே அவன் தான் ப்ரோக்கர்.. என்ன வேணும்னாலும் பேசுவான்! இதைத் தூக்கிட்டு வந்து நீங்க ஏன் உங்க தரத்தை குறைச்சுக்குறீங்க? இந்த செய்தியை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது தொடுக்க இருக்க கிர்மினல் டெஃபமேஷன் முடிவில் கோர்ட்டில் தெரியும் எது உண்மை எது பொய்னு!!” என பதிவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்