‘சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சி’ என்.ஆர்.இளங்கோ குமுறல்!
‘வக்ஃபு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முயன்றபோது தமிழக மக்களின் உணர்வாக அதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது’

‘சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சி’ என்.ஆர்.இளங்கோ குமுறல்!
அரசியலமைப்பின் படி தமிழ்நாடு முதல்வர் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அதனை எதிர் கொள்ள முடியாமல் காலங் கடந்து, சட்டத்தை மீறி சோதனைகள் நடைபெறுகின்றன! எப்பொழுதெல்லாம் தமிழத்திற்காக குரல் கொடுக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள், மக்கள் நிச்சயம் இதனை நிராகரிப்பார்கள் என்று திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்.பி செய்தியாளர்களிடம் பேட்டி. இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
12 ஆண்டுகளுக்குப் பின் அமலாக்கத்துறை சோதனை
‘‘இன்றைய தினம் அமலாக்கத் துறையினுடைய அதிகாரி சோதனையின் போது அளித்த விவரங்களின்படி, 2013 ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021 இல் ஒரு வழக்கு பதிந்து அதன் பிறகு ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.