ஞானசேகரன் மீது அதிமுக ஆட்சியிலேயே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்! திமுக எம்.பி. கனிமொழி பேட்டி!
கடந்த 2014 ஆம் ஆண்டு இதே செயலில் ஈடுபட்டவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதே அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ருந்தால் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு பட்டிருக்கும் என கனிமொழி பேட்டி
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஞானசேகருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2014 இல் ஞானசேகரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தால் அன்றே அவர் தண்டிக்கப்பட்டு இருப்பார் இராமநாதபுரத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறி உள்ளார்.
இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வுக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஐடி விங்கை சேர்ந்த திமுகவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி ஆர் பி ராஜா, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக ஐடி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை கூறி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சி மீது குற்றச்சாட்டு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கடந்த 2014 ஆம் ஆண்டு இதே செயலில் ஈடுபட்டவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதே அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ருந்தால் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு பட்டிருக்கும்.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது அப்போதைய அரசு பொள்ளாச்சி வழக்கில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இவ் வழக்கில தற்போதைய முதல்வர் குற்றம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் விரைந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு சரியான தண்டனை கிடைப்பதற்கு வன இந்த அரசு வழிவகை செய்யும்.
பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனை இந்த அரசு விரைந்து செய்துள்ளது என்றார்.
அண்ணாமலைக்கு என்ன வேண்டுதலோ!
பாமக கூட்டத்தில் இருவருக்கும் நடந்தது குடும்ப சண்டை... அது குறித்து கருத்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அண்ணாமலைக்கு என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.
நல்லவர் கெட்டவரை கண்டுபிடிப்பது எளிது அல்ல
ஒரு கட்சியில் ஆயிரம் பேர் பயணிப்பார்கள் அதில் நல்லவர் கெட்டவரை கண்டுபிடிப்பது எளிதல்ல. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எந்த கட்சியினராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனக் கூறினார்
முன்னதாக திமுக ஐடி விங்கில் செயல்படுபவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களின் பங்கு திமுகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக உள்ளது அவர்களுக்கு தொடர்ந்து தான் உறுதுணையாக இருப்பேன் என வாழ்த்து தெரிவித்தார்.