’அண்ணா பல்கலைக்கழக சம்பவம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்று!’ திமுக எம்பி கனிமொழி வேதனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அண்ணா பல்கலைக்கழக சம்பவம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்று!’ திமுக எம்பி கனிமொழி வேதனை!

’அண்ணா பல்கலைக்கழக சம்பவம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்று!’ திமுக எம்பி கனிமொழி வேதனை!

Kathiravan V HT Tamil
Jan 04, 2025 12:45 PM IST

இந்த சம்பவம் சமூகமே வெட்கித் தலைகுணிய கூடிய ஒன்றுதான். தொடர்ந்து உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்து வருகின்றது. பொள்ளாச்சியில் நடந்து போல் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை பாதுக்க வேண்டிய நிலை இங்கு இல்லை என தெரிவித்தார்.

’அண்ணா பல்கலைக்கழக சம்பவம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்று!’ திமுக எம்பி கனிமொழி வேதனை!
’அண்ணா பல்கலைக்கழக சம்பவம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்று!’ திமுக எம்பி கனிமொழி வேதனை!

சென்னையில், திமுக எம்.பியும், அக்கட்சியின் துணைபொதுச்செயலாளருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பிரதமர் அவர்கள் இதுவரை அங்கு செல்லவில்லை. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றவாளிக்கு நியாமான தண்டனை கிடைத்தால்தான் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததாக அர்த்தம். ஆனால் அப்படி இருக்கும் சூழலில் என்னுடைய கண்டனத்தை ட்விட்டரிலும், செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்துவிட்டேன். 

இந்த சம்பவம் சமூகமே வெட்கித் தலைகுணிய கூடிய ஒன்றுதான். தொடர்ந்து உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்து வருகின்றது. பொள்ளாச்சியில் நடந்து போல் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை பாதுக்க வேண்டிய நிலை இங்கு இல்லை என தெரிவித்தார். 

கேள்வி:- யார் அந்த சார்? என்று விசாரிக்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் கூறுகிறார்களே?

அந்த பெண்ணுக்கு எப்படி அது தெரியும். விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. செல்போன் ஏரோ பிளைன் மோடில் உள்ளதாக காவல்துறை கூறுகிறது. விசாரணையில் அது வெளிப்படலாம். அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்றும் தெரிய வரலாம். 

நடவடிக்கை எடுத்த பிறகு போராடும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயல்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை கசிய காரணம் தமிழ்நாடு அரசு இல்லை. 

பாலியல் பலாத்கார வழக்கில் பெண் ஏன் அங்கிருந்தார். அண்ணா என்று அழைத்து இருந்தால் விட்டுருப்பாரே என்று பெண்களை குற்றவாளிகளாக குற்றம் சாட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நமது கொள்கை எதிரி. 

கேள்வி:- ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்தில் குஷ்பு அடைத்ததாக புகார் எழுந்து உள்ளதே?

ஆடுகள் அடைக்க கூடிய இடத்தில் எதற்கு ஆடுகளை விட்டுவிட்டு மனிதர்களை அடைக்க போகிறார்கள் என கனிமொழி கூறினார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.