தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Mla Son: 'What Is The Chief Minister Doing Who Talks About Social Justice?' Evidence Radiation!

DMK MLA Son: 'சமூகநீதி பேசும் முதல்வர் என்ன செய்கிறார்?' எவிடன்ஸ் கதிர் காட்டம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 20, 2024 10:10 AM IST

சமூக நீதி பேசும் முதலமைச்சர் இது குறித்து பொறுப்பேற்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என எவிடென்ஸ் கதிர் குற்றம் சாட்டி உள்ளார்.

எவிடன்ஸ் கதிர் காட்டம்
எவிடன்ஸ் கதிர் காட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது,

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக மாதம் 16 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 17 வயதிலயே சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். இரண்டாவது நாளிலயே அடிக்க தொடங்கியுள்ளனர். மூன்று வேலையும் சமைத்து தர வேண்டும் என கூறி பல்வேறு பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கி கையில் சூடு வைத்து மிளகாய்பொடியை கரைத்து முகத்தில் ஊற்றி கொடுமைபடுத்தியுள்ளனர். சமூக நீதி, பெண்கள் நலன் பேசும் திமுகவினர் பெண் குழந்தையை வீட்டில் வைத்து அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். இப்போது கேட்டால் மகன் பண்ணியது எனக்கு தெரியாது எனக்கூறுவதற்கு எதற்கு அரசியலில் இருக்குறங்க, சிறுமியை எம்.எல்.ஏவின் மகன் மருகள் பாத்ரூமில் உடமைகளை வைத்து தங்க வைத்துள்ளனர்

நீயும் நானும் ஒன்னா என சாதிய ரீதியாக கேட்டு ரேசன் அரிசியை சமைக்க வைத்து தனி சாப்பாடு மட்டும் சாப்பிட வைத்து கொடுமை படுத்தியுள்ளனர். நீட் எக்ஸாம் எழுதி படிப்பதற்காக கல்வி செலவுக்காக வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

சிறுமியை வீட்டிற்கு பூட்டி வைத்து அடைத்து செல்போனை பறித்து வைத்துள்ளனர். அவர்களுடைய குழந்தையை சிரிக்கவைப்பதற்காக சிறுமியை ஆட வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

எம்எல்ஏவின் மருமகளும், மகனும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி எதையும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

கையில் சூடுவைத்த காயம் தெரியக்கூடாது என்பதற்காக கையில் மருதாணி போட்டு மறைத்துள்ளனர்.

காவல்துறையினருக்கு FIR பதிவு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். வன்முறையை செய்துவிட்டு வாகனங்களில் வந்து ஊர்காரர்களை மிரட்டியுள்ளனர், சிறுமிக்கு மோசமாக கொடூரமான வன்கொடுமை இது தொடர்பாக இப்போது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3.5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மாணவியின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும், மாதம் தோறும் 15 ஆயிரம் சிறுமிக்கு வழங்க வேண்டும், இருவரையும் கைது செய்ய வேண்டும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பிணைக்கொடுக்க கூடாது, இது தமிழகத்திற்கு பெரும் அவமானம், நீட்டை பற்றி பேச தமிழக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது முதலமைச்சர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை இது கண்டிக்கதக்கது என அறிக்கை கூட விடவில்லை

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும், 3 ஆண்டுகளில் எடுத்த அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் சந்தேகம் எழுகிறது, சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடைபெற்றுள்ளது.இங்கு என்ன அமைதிபூங்காவாக இருக்கிறது , 17 வயது சிறுமியை எப்படி வீட்டு வேலைக்கு சேர்த்தார்கள். ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் கொடுமை படுத்தியுள்ளனர் என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்