கீழடி விவகாரம்: ’பச்சை பொய் சொல்கிறார் மாஃபா பாண்டியராஜன்’ திமுக எம்.எல்.ஏ எழிலன் விளாசல்!
”2014-ல் பாஜக அரசு வந்தபின் அமர்நாத் தலைமையில் இரண்டு கட்ட அளவில் தொல்லியல் ஆய்வு நடத்தினர். 2016 முடியும் தருவாயில் அந்த ஆய்வை நிறுத்தி கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டார்; அந்த ஆய்வை மூட சொன்னர்கள்”

கீழடி விவகாரம்: ’பச்சை பொய் சொல்கிறார் மாஃபா பாண்டியராஜன்’ திமுக எம்.எல்.ஏ எழிலன் விளாசல்!
கீழடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பச்சையாகப் பொய் சொல்கின்றார் என திமுக எம்.எல்.ஏ எழிலன் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக மருத்துவரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உள்ள திராவிட மாடல் அரசு கீழடிக்காக மற்றுக்கொண்ட பணிகளைப் பற்றியும் அறிவீர்கள். கீழடி ஆய்வின் போது அதை மேற்கொண்ட அமர்நாத் பணி மாற்றம் செய்த, கீழடி ஆய்வின் உண்மைத் தன்மையை கேள்வி எழுப்பிய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தியது.