Theni DMK Conflict: தேனி மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் - அதிமுகவுக்குச் செல்லும் உ.பி.க்கள் - சாதி பின்னணியா?
தேனி மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் நிலவுவதால் அதிமுகவுக்கு திமுகவினர் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளருக்கும் பெரிகுளம் எம்.எல்.ஏவுக்கும் இடையிலான கோஷ்டி மோதலால், திமுகவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதாகவும், அதனால் பலர் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் தெரிகிறது.
தேனி மாவட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்ச்செல்வன். இவருக்கும் பெரியகுளம் தனித்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமாருக்கும் இடையேயான உட்கட்சி பூசல் தீவிரமாக முற்றியுள்ளது. இதனால் திமுகவினர் பலரும் எதிர்முனையான அதிமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடந்தது என்ன? தேனி மாவட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர், முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் பட்டியலினத்தைச் சார்ந்தவர். இருவரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்ததுபோல் தோற்றம் இருந்தாலும், தேனி மாவட்ட திமுக நிர்வாகிகளை நியமிப்பதில் இருவருக்கும் இடையே சாதி ரீதியிலான பாசம் மேம்பட்டு, தங்களுக்குப் பிடித்தமான பகுதிகளில் திமுக நிர்வாகிகள் ஆக்கியுள்ளனர். இதனால் பொதுவாகப் பயணிக்கும் திமுகவினருக்கு இச்செயல் அதிருப்தியை உண்டுசெய்துள்ளது.
இதுதொடர்பாக, தேனி மாவட்டத்தில் இருக்கும் திமுகவைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைய அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரிக்கையில் தேனி மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அதன்காரணமாக பல திமுகவினர் அதிமுக,பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக, தேனி மாவட்ட தாமரைக்குள திமுக பேரூர் கழக துணைசெயலாளர் அப்பாஸ் மைதீன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி,அதிமுகவில் இணைய சேலம் சென்றுள்ளனர். அங்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திமுகவில் இணையவுள்ளனர்.
அவ்வாறு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணகுமார், திமுகவின் வளர்ச்சிக்கு உதவாமல் திமுகவிற்கு உழைப்பவர்களை ஒதுக்கிவைப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். கட்சிக்காக உண்மையில் உழைப்பவர்களை இருவரும் மதிக்கவே இல்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் என தேனி மாவட்ட உடன்பிறப்புக்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9