’பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது’ மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!
” அமலாக்கத் துறை நடவடிக்கை, காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை, நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்றார்”

’பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது’ மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!
குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி தி.மு.க. தலைமை அடைக்கலம் புகுந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக அரசியல் எதிரி! பாஜக கொள்கை எதிரி!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.
