'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பயிற்சி முகாம் தொடக்கம்!
'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை திட்டத்திற்கான பயிற்சி முகாம் இன்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு 25-6-2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.முக. அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்கிறார்கள். இவர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக உள்ள சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூலை 1ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்படவுள்ள 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு, செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,"முதலமைச்சர் பொதுக்குழுவில் அறிவித்தது போல் ஓரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம். ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்கள். அடுத்த நாள் முதல் மாவட்டங்களில் இருக்கும் அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பேரணியாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைப்பார்கள்.