தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Executives Urged The Election Committee Not To Allocate Namakkal Constituency To The Alliance

Namakkal : ‘நாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது’ - மக்களவைத் தேர்தல் குழுவிடம் குமுறிய திமுக நிர்வாகிகள்

Marimuthu M HT Tamil
Jan 28, 2024 02:24 PM IST

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவிடம் சில நிர்வாகிகள் எதிர்க்குரல் தெரிவித்துள்ளனர்.

Namakkal : ‘நாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது’ - மக்களவைத் தேர்தல் குழுவிடம் குமுறிய திமுக நிர்வாகிகள்
Namakkal : ‘நாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது’ - மக்களவைத் தேர்தல் குழுவிடம் குமுறிய திமுக நிர்வாகிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூன்றாவது நாளாக, மக்களவைத் தேர்தல் தொடர்பாக, திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகிய ஐவர் கொண்ட திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக, இன்று நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அப்போது நாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காமல், அங்கு திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும்; கடந்த முறை நாமக்கல் தொகுதியை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில், அவ்விடம் திமுக வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஐவர் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. அப்போது திமுக நிர்வாகிகள் கருத்து முரண்பாடு இல்லாமல் தேர்தல் வேலைகளை செய்யுமாறு, திமுக நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குழு அறிவுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்