’என்னை மீறி ஒரு அதிகாரி கு* விட முடியாது! கலெக்டர் நான் சொல்றததான் கேக்கணும்!’ திமுக ம.செவின் சர்ச்சை ஆடியோ!
“ஒரே அதிகாரி கூட நான் சொல்றது கேட்கல, அந்த அதிகாரி இருக்க மாட்டான். இதுல யாரும் தலையிட முடியாது. நீங்க நினைக்கிற ஆளுங்க எல்லாம் சொல்லி அந்த ஆளுங்களை மாத்த முடியாது. நான் லெட்டர் வச்சாதான் மாத்த முடியும்”

நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பியை கூட மாற்ற முடியும்; எல்லோருமே எனக்கு கீழேதான் என தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் பேசியதாக சமூகவலைத்தளகளில் வைரல் ஆகி வருகிறது.
தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர்
தருமபுரியில் திமுக இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது. தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்குள் தருமபுரி, பென்னாகரம் ஆகிய 2 தொகுதிகளும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.
இந்த நிலையில் கடந்த தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியிடம் இருந்து அப்பொறுப்பு பறிக்கப்பட்டு தர்மசெல்வனுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தர்ம செல்வன் பேசிய ஆடியோவை அங்கிருந்தவர்கள் ரெக்கார்ட் செய்து வெளியிட்டு உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வைரல் ஆகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க:- டாப் 10 தமிழ் நியூஸ்: ’ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக மனைவி அறிக்கை! திமுக மேடையில் வடிவேலு’
தர்மசெல்வன் பேசியது என்ன?
“ஒரே அதிகாரி கூட நான் சொல்றது கேட்கல, அந்த அதிகாரி இருக்க மாட்டான். இதுல யாரும் தலையிட முடியாது. நீங்க நினைக்கிற ஆளுங்க எல்லாம் சொல்லி அந்த ஆளுங்களை மாத்த முடியாது. நான் லெட்டர் வச்சாதான் மாத்த முடியும். அதை நீங்க உணர்ந்துக்கணும், சரிங்களா; கலெக்டர் நான் சொல்றது தான் கேட்கணும். எஸ்பி நான் சொல்றது தான் கேட்கணும். கீழ இருக்கிற அத்தனை நிர்வாகமும் நான் சொல்றது தான் கேட்கணும். கேட்கலைன்னா அவங்க இருக்க மாட்டாங்க, இதை நான் செய்வேன்.
மேலும் படிக்க:- ஆதவ் அர்ஜூனாவின் அரசியலுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தொடர்பில்லை! ஆதவ் மனைவி டெய்சி திட்டவட்டம்!
எந்த அதிகாரியும் குசு கூட விட முடியாது. என்னை மீறி அப்படி இப்படி கேம் ஆடுறதுக்கு எல்லாம் இடமே கிடையாது. எவனும் கேம் ஆட முடியாது. கேம் ஆடுனா முடிஞ்சு அவன் கதை. எனக்கு என்ன தலைவர் சொல்லி இருக்காரு எனக்கு தெரியும். நீ சொல்றதுக்கு வந்து அங்க வந்துட்டு அதிகாரி அதிகாரிகளா இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, கேக்கலன்னா உங்க லெட்டர் பேடல எனக்கு லெட்டர் கொடுன்னு சொல்லிக்கிறார்.
சரியா, கலெக்டர் உட்பட நான் சொல்றேன். அதுக்கு மேல நான் கீழ உள்ளவங்க எல்லாம் நான் பேச விரும்பல. பிடிஓ-வா அந்த பிடிஓ ஆபீஸ்ல ’ஏ டு இசட்’ எதுவா இருந்தாலும் எனக்கு தெரியணும். ஒன்றிய செயலாளருக்கு தெரியணும். அப்படித்தான் நடக்கும். இதுல யாரும் உள்ள பூந்து குறுக்குசால் ஓட்ட முடியாது. நம்ம பொறுப்பு அமைச்சர் இதுக்கு முன்னாடி அவர் எப்படி பண்ணிருந்தார் என எனக்கு தெரியாது.

டாபிக்ஸ்