DMDK Boycott Erode By Election: அதிமுக வழியில் தேமுதிக! ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று (ஜனவரி 10) தொடங்கிய நிலையில், வரும் ஜனவரி 17ஆம் தேதி உடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
வி.சி.சந்திர குமார் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே நேரடியாக போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்த நிலையில், திமுக வேட்பாளாராக வி.சி.சந்திரகுமாரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
அதிமுக புறக்கணிப்பு
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆலோசனையை நடத்திய பின்னர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என த்ரிவித்து இருந்தார்.
தேமுதிக புறக்கணிப்பு
இதனிடையே தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. தேமுதிக பொதுசெயலாளர் பிரேலமதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
தொடர்புடையை செய்திகள்