Tamil News  /  Tamilnadu  /  Dmdk Leader Vijayakanth Under Icu Treatment

Vijayakanth Health: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ICU-இல் சிகிச்சை! வெளியான புதிய தகவல்!

Kathiravan V HT Tamil
Nov 20, 2023 10:08 AM IST

”தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்”

தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்கத்தின் தலைவராகவும், பின்னர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி முழுநேர அரசியலிலும் இறங்கினார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோதே அவர்களுக்கு போட்டியாக கட்சி அமைப்புகளை பலப்படுத்தி 10 சதவீத வாக்குகளை பெற்றார்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சி தலைவரானார். அடுத்து நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஜயகாந்த் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சி பணிகளை அவரது மனைவியும் தேமுதிக கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல் நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியூ அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் தாமாக சுவாசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்