Vijayakanth Health: விஜயகாந்திற்கு செயற்கை சுவாசமா? தேமுதிக தலைமை விளக்கம்!
Vijayakanth Health: ”செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம்”
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது
ட்ரெண்டிங் செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக தேமுதிக சார்பில் அப்போது வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல் நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியூ அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் சுவாசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என தேமுதி கட்சித் தலைமை விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிருநாளி ல் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்