DK Shivakumar : தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் மேகதாது அணை திட்டம் இருக்கும் - டி.கே. சிவக்குமார் உறுதி
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருக்கும் மாநில கட்சிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகவே இதை பார்க்கிறேன். தற்போது இருக்கும் நிலையே இருக்க வேண்டும் என டி.கே சிவக்குமார் தெரிவித்தார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி சக்கரத்தாழ்வார் சன்னதியில் மகா சுதர்சன யாகம் செய்து சிறப்பு வழிபாடும் நேர்த்திக் கடனும் செலுத்தி வழிபாடு செய்தார்.
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே.சிவக்குமார் ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரித்திங்கரா தேவி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்தார்.
காஞ்சிபுரம் வருகை தந்த கர்நாடகா துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, காஞ்சிபுரம் வருகை தந்து தேவராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வேண்டிக் கொண்ட நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதனை ஒட்டி காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக கோவிலுக்கு வருகை தந்து சக்கரத்தாழ்வார் சன்னதியில் , கோபூஜை செய்து,மகா சுதர்சன யாகம் மேற்கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாள் கடந்த 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இந்த கோயிலுக்கு வந்து சென்றிருந்தேன். தமிழ்நாடு ஆன்மீகத்திற்கு மிகவும் சிறந்த இடமாக இருக்கிறது. அர்ச்சகர்கள் சிறப்பாக யாகத்தை மேற்கொண்டார்கள்.
திருப்பதி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. மாநில சட்ட ஒழுங்கு தொடர்பாக எதுவும் பேச வேண்டாம்.
கர்நாடகா மேகதாது விவகாரம் தொடர்பாக , மேகதாது கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் இருக்கும். நீதிமன்றம் நியாயம் வழங்கும். தண்ணீரை அங்கு தேக்கி வைக்க முடியும். உச்ச நீதிமன்றம் இதே நேரத்தில் தென்பெண்ணை ஆறு தொடர்பாக அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
நேற்று கர்நாடகாவில் நக்சலைட் தீவிரவாதிகள் சரண்டர் ஆனது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், அந்த 6 பேரில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தமிழ்நாடு கர்நாடகா அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
அதேபோல் ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து அவர் தனது கருத்தை பகிர்ந்தார். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருக்கும் மாநில கட்சிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகவே இதை பார்க்கிறேன். தற்போது இருக்கும் நிலையே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
டாபிக்ஸ்