‘கப்பலூர் டோல்கேட்.. கிணத்துக் கடவு தடுப்பணை.. பெட்ரோல் பங்க் அனுமதி’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தில், இன்று விவாதிக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.

‘கப்பலூர் டோல்கேட்.. கிணத்துக் கடவு தடுப்பணை.. பெட்ரோல் பங்க் அனுமதி’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த வரும் நிலையில், இன்று கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதில் உறுப்பினர்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கைகளும், அதற்கு அமைச்சர்கள் அளித்த முக்கிய பதிலும் இதோ:
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த 3 நாட்களாக சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு முன், சபாநாயகர் அறையில் காத்திருந்து, அதன் பின் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். இன்று சட்டமன்றம் தொடங்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பே அவைக்குள் வந்து, தன்னைச் சுற்றி வந்த சர்ச்சைகளுக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.
- கிணத்துக் கடவு தடுப்பணை சீரமைக்கப்படுமா என்று அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கேள்வி எழுபபிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன், ‘‘பழுதடைந்த தடுப்பணையை சீரமைக்க, ரூ.1.69 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பதிலளித்தார்
- அதே போல கிணத்துக்கடவு தொகுதிக்கு கூடுதல் தடுப்பணை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘கிணத்துக்கடவு தொகுதிக்கு 3 தடுப்பணை கட்டித் தர கூறிவிட்டேன்.. இதற்கு மேல் அணை கேட்டால் அது பேராசை’’ என்று பதிலளித்தார்.
- பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்கப்படுமா? என்று திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாநில நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் அமைக்கலாம் என்றும், இதர சாலைகளின் சந்திப்பில் 100 மீட்டர் தூரத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க, தடையில்லா சான்று வழங்கப்படும்,’’ என்று எ.வ.வேலு பதில்.
மேலும் படிக்க | ‘அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசை திருப்பவே..’ சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து முதல்வர் பேச்சு!
