‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!

‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 18, 2025 12:23 PM IST

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் தொடரபான விவாதத்தில் இன்று விவாதிக்கப்பட்ட முக்கிய கோரிக்கைளின் தொகுப்பு இதோ:

‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
  • திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கொங்கு ஈஸ்வரின் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சம்மந்தப்பட்ட மலைக்கோயிலுக்கு இந்த ஆண்டே மாற்றுப்பாதை அமைக்கப்படும், ரோப்கார் வசதி சாத்தியமில்லை என்பதால், மாற்றுப் பாதை அமைக்க முடிவு செய்யப்படும்’’ என்று அமைச்சர் பதிலளித்தார்.
  • முருங்கை இலை பவுடர் ஆலைகள் அமைக்கப்படுமா என்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘‘தமிழகம் முழுவதும் 31 தனியார் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை இலலையை பதப்படுத்தும் 2 தனியார் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே நிலக்கோட்டையில் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க திட்டம் இல்லை,’’ என்று அமைச்சர் பதிலளித்தார்.

மேலும் படிக்க | அப்பாவுக்கு எதிரான அதிமுக தீர்மானம்.. ஆதரவாக எழுந்த நின்ற துரைமுருகன், உதயநிதி - சட்டப்பேரவை எழுந்த சிரிப்பலை

  • பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் , வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் 4 அல்லது 5 இடங்களில் தடுப்பணையும், சிற்றாறு பகுதியில் கங்கை கொண்டான் பகுதியில் தடுப்பணை கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘நயினார் நாகேந்திரன் வைத்த கோரிக்கை நியாயமானது. அவர் சொன்னது போல முக்கியமான நதி தாமிரபரணி. நயினார் நாகேந்திரன் வைத்த கோரிக்கை நியாயமான கோரிக்கை, அவசியமான கோரிக்கை. அதற்கு முன்னுரிமை கொடுத்து, அந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று துரைமுருகன் பதிலளித்தார்.
  • விருகம்பாக்கத்தில் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் 3 குழந்தைகள் மையத்திற்கு தான் வாடகை செலுத்தி வருவதாகவும், அரசு சார்பில் பட்டா இல்லாத நிலங்களை குழந்தைகள் மையத்திற்கு தரப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், ‘‘வாடகை கட்டங்களில் இயங்கும் குழந்தைகள் மையத்திற்கு வழங்கும் வாடகை ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும், சென்னை மாநகராட்சி மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கீதா ஜீவன் பதிலளித்தார்.

மேலும் படிக்க | ‘அதிமுகவை உடைக்க முடியாது.. நினைப்பவர்கள் மூக்கு தான் உடைபடும்’ எடப்பாடி பழனிசாமி பேட்டி

  • வேதாரண்யம் தொகுதி துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் தொடங்கப்படுமா? என்று ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘மொத்தம் 5 அவ்வையார்கள் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் கேட்பது எந்த அவ்வைக்கு?’’ என்று துரை முருகன் பதில் கேள்வி எழுப்பினார். மேலும் வயதானவர்களை ஆயா என அழைப்பது போல, அந்த காலத்தில் பெண் புலவர்களை அவ்வை என்று அழைத்திருப்பார்கள் போல,’’ என்று துரைமுருகன் கூற, அப்போது எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘இவ்வளவு நாள் அவ்வையார் என்று கூறினோம், இப்போது அவ்வை யார்? என்று கேள்வி எழுந்துள்ளது’’ என்று அவர் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.