Pa.Rajnith: ’தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!’ முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pa.rajnith: ’தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!’ முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!

Pa.Rajnith: ’தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!’ முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!

Kathiravan V HT Tamil
Published Feb 15, 2025 12:22 PM IST

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!

Pa.Rajnith: ’தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!’ முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!
Pa.Rajnith: ’தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!’ முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!

‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்

கேள்வி: தலைவர் – முதல்வர்... இப்போது “அப்பா” என்றுஅழைக்கிறார்களே?

கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், “தலைவர்” என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், “முதல்வர்” என்றும் அழைக்கிறார்கள்...

இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை “அப்பா” என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது... காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறுயாராவது வருவார்கள்... ஆனால், இந்த “அப்பா” என்ற உறவுமாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன்... நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது!

கேள்வி:- பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது... தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மைகிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்குஎந்த நிதியும் இல்லை! பெயர்கூட சொல்வதில்லை.

மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்... மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்!

நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக்கூடகொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவேகொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு ஒன்றிய அரசு தொடர்ந்துநம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

முதல்வருக்கு பா.ரஞ்சித் கேள்வி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை சுட்டிக்காட்டி இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சனங்களை முன் வைத்து உள்ளார்.

இது தொடர்பாக தனது ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா???

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.