தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Direct Admission In Any Course In Tiruvarur Central University Details Inside

Central University : திருவாரூர் மத்திய பல்கலை.யில் எந்தெந்த படிப்பிற்கு நேரடி சேர்க்கை – விவரங்கள் உள்ளே…

Priyadarshini R HT Tamil
May 21, 2023 11:45 AM IST

Central University : திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எந்தெந்த கோர்ஸ்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இத்தகவலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா மழுவதிலும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றுதான் சேர முடியும். ஆனால், மத்திய பல்கலைக்கழகங்களில் சில படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. அதில் சேர்ந்து மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். அந்த வகையில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எந்தெந்த கோர்ஸ்களுக்கு நேரடி சேர்க்கை மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான விடுதிகள் குறித்த விவரங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நேரடியாக சேர விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரியின் அலுவலர் பி.எஸ். வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது –

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சமுதாய சமுதாயக்கல்லூரியில் கல்வெட்டு மற்றும் பாரம்பரிய மேலாண்மை குறித்த ஓராண்டு பட்டயப்படிப்பிற்கு நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதேபோல மூன்றாண்டு இளம் வணிகவியல், மூன்றாண்டு டிஜிட்டல் ஜர்னலிசம் அண்ட் மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் ஆகிய படிப்புகளுக்கும் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்படிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடைபெறும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க சமுதாயக்கல்லூரியில் சேர்க்கை நடைபெறும்.

எனவே, திருவாரூர் மற்றும் சுற்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படுவர்.

மத்திய பல்கலைக்கழக விடுதிகளில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே, பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு சமுதாயக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதிகளில் அனுமதி வழங்கப்படும்.

இக்கல்லூரியில் சேர உதவி தேவைப்படுவோர் com_college@ cutn.ac.in அல்லது 7339643445 என்ற கைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்