விஜய் முன் TVK…! TVK…! என கத்தியது என் காதில்.. டீ விக்க…! டீ விக்க…ணு கேட்டது! திண்டுக்கல் லியோனி கிண்டல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விஜய் முன் Tvk…! Tvk…! என கத்தியது என் காதில்.. டீ விக்க…! டீ விக்க…ணு கேட்டது! திண்டுக்கல் லியோனி கிண்டல்!

விஜய் முன் TVK…! TVK…! என கத்தியது என் காதில்.. டீ விக்க…! டீ விக்க…ணு கேட்டது! திண்டுக்கல் லியோனி கிண்டல்!

Kathiravan V HT Tamil
Published May 04, 2025 11:51 AM IST

ஒரு கட்சித் தலைவர் முன்னால் வேனில் நின்று டப்பாங்குத்து ஆடுவது கட்சியா?” என திண்டுக்கல் ஐ.லியோனி கேள்வி!

விஜய் முன் TVK…! TVK…! என கத்தியது என் காதில்.. டீ விக்க…! டீ விக்க…ணு கேட்டது! திண்டுக்கல் லியோனி கிண்டல்!
விஜய் முன் TVK…! TVK…! என கத்தியது என் காதில்.. டீ விக்க…! டீ விக்க…ணு கேட்டது! திண்டுக்கல் லியோனி கிண்டல்!

தவெகவை கிண்டல் அடித்த லியோனி 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை கிண்டலடித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டீ விற்கத்தான் போகிறீர்கள்…!

லியோனி தனது பேச்சில், தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஒருவர் “TVK, TVK” என்று கூறியதை, “டீ விற்க, டீ விற்க” என்று தான் கேட்டதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “2026-ல் நீங்கள் டீ விற்கத்தான் போகிறீர்கள், ஒரு கட்சித் தலைவர் முன்னால் வேனில் நின்று டப்பாங்குத்து ஆடுவது கட்சியா?” என்று கேள்வி எழுப்பி, தவெகவின் அரசியல் முயற்சிகளை கிண்டல் செய்தார். மேலும், ஒரு கட்சித் தலைவர் முன்னிலையில் “குத்தாட்டம்” போடுவது கட்சி நடவடிக்கையாக இருக்க முடியாது என்று கூறி விமர்சித்தார்.

கோவையில் விஜய்யின் தவெக வாக்குச்சாவடி முகவர் கூட்டம்

கடந்த ஏப்ரல் 26, 27ஆகிய தேதிகளில் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், கோவையில் நடைபெற்ற முதல் வாக்குச்சாவடி முகவர் கருத்தரங்கில் பங்கேற்று, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் பிரச்சார உத்திகள் குறித்து பேசினார். 

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் (ஏப்ரல் 26-27) நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். விஜய், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன், அவினாசி சாலை வழியாக பிரச்சார வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்டு, ரசிகர்களையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார்.

ஊழலற்ற ஆட்சிக்கு உறுதி

ஏப்ரல் 28 அன்று, வாக்குச்சாவடி முகவர்களை உரையாற்றிய விஜய், தவெக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். “இது ஒரு தூய்மையான ஆட்சியாக இருக்கும்” என்று கூறிய அவர், 2026 தேர்தலுக்கு “நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும்” தயாராகுமாறு முகவர்களை அழைப்பு விடுத்தார்.

வாக்குச்சாவடி முகவர்களை “கட்சியின் முதுகெலும்பு” என்று வர்ணித்த விஜய், வாக்காளர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். “தவெக ஒரு அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.  

அரசியல் முக்கியத்துவம்

கோவையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், தவெகவின் மேற்கு மண்டலத்தில் (கொங்கு பகுதி) செல்வாக்கை விரிவாக்குவதற்கான முதல் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலம், தமிழக அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் பகுதியாகும், மேலும் இங்கு திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு எதிராக தவெக தனது இருப்பை நிலைநாட்ட முயல்கிறது.