தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Different Party Cadres Joined Bjp In Madurai

law students joined BJP:பாஜகவில் இணைந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்

I Jayachandran HT Tamil
Oct 19, 2022 09:53 PM IST

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

பாஜக கொடி
பாஜக கொடி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று பாஜகவில் இணைந்தனர். மதுரை சிறுபான்மை அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயா உடன் பல்வேறு கட்சிகளில் இருந்து500க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு விழா மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ராம சீனிவாசன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்