பாவலர் வரதராசனை கொலை செய்தது கம்யூனிஸ்டுகளா? கங்கைஅமரன் பேச்சால் புதிய சர்ச்சை
’’கம்யூனிஸ்ட் கட்சியில் பாடும்போது 40 ரூபாய் கிடைக்கும், திமுகவில் இணைந்த போது 250 ரூபாய் கொடுத்தார்கள்’’
இசையைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான கங்கை அமரன் தனது மூத்த அண்ணன் பாவலர் வரதராசன் இறந்தது குறித்த வெளிவராத தகவல்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் மூத்த அண்ணன் பாவலர் வரதராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மேடைப்பாடகராக இருந்தார். இவரிடம் இருந்துதான் இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் தொடக்கத்தில் இசையை கற்றுக்கொண்டனர். தமிழகம் மற்றும் கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளில் தனது பாடல்கள் மூலம் கம்யூனிசத் தத்துவத்தை மக்களிடம் கொண்டு சென்றதில் பாவலர் வரதராசனின் பங்கு மிக அதிகம். இந்த நிலையில் இவரது மரணம் பற்றி வெளிவராத தகவல்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பகிர்ந்துள்ளார் கங்கை அமரன்,
கேள்வி: திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பாவலர் வரதசாரசன் கம்யூனிஸ்ட் கட்சியினரால் இறந்தார் என சொல்லப்படுகிறதே உண்மையா?
பதில்: அந்த நேரத்தில் மாநிலத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தது, அக்காலத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் அடுத்ததாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக கூட்டம் வந்து கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் பாட்டுப்பாடும் வேலையை அண்ணன் மேற்கொண்டு வந்தார். அவருக்கு அதிகப்படியான கூட்டங்கள் கூடியது சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம், அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்து மொட்டை கடுதாசி எழுதியதாக கைது செய்யப்பட்டார்.
கேள்வி: உங்கள் அண்ணன் தங்கள் கட்சியில் இருந்தால் நல்லது என்று திமுக கருதியது. திமுகவே திட்டமிட்டு அவரை கைது செய்ததால் அவரே திமுகவில் இணைந்தார் என சொல்லப்படுகிறதே உண்மையா?
பதில்: நீங்கள் சொல்வதேயே வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு தெரியவில்லை, நீங்கள் உண்மையததான் கேள்விப்படுவீர்கள் என்று எனக்கு தெரியுது, அது அப்படியே இருக்கட்டும். அவர் கைது செய்யப்பட்டபோது நாங்கள் எல்லாம் சென்னையில் இருந்தோம். அண்ணன் கைதானதை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலதண்டாயுதம், ராம்மூர்த்தி ஆகியோரை சந்தித்து விவரங்களை சொன்னோம். வழக்கறிஞர் ஒருவரை சொன்னார்கள் ஆனால் ஒரு தகவலும் நடப்பது போல தெரியவில்லை
அந்த சமயத்தில் திமுகவின் மதுரை முத்து பக்கபலமாக இருந்தார். அவர் அண்ணனை சிறையில் இருந்து அழைத்து வந்து திமுகவில் சேர்த்து கொண்டார். விதியால் திமுகவில் இணைந்த அவர் திருப்பரங்குன்றம் திமுக மாநாட்டில் ’இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்க கூடாதா அண்ணா’ என பாடினார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் பாடும்போது 40 ரூபாய் கிடைக்கும், திமுகவில் இணைந்த போது 250 ரூபாய் கொடுத்தார்கள். அப்போது அண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மருத்துவமனையில் இறந்தார்.
கேள்வி: எந்த கட்சியில் அண்ணன் இருந்தாரோ அந்த கட்சியினரே ஆட்களை வைத்து கொன்றார்கள் என ஒரு தகவல் உள்ளதே?
பதில்: பேசினால் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அண்ணனுக்கு அடிபட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அவர் இறந்தார்.
டாபிக்ஸ்