தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Devotees Allowed Sathuragiri Temple For Four Days Due To Thai Prathosham, Pournami

Sathuragiri Temple: ஒரு மாத கால காத்திருப்பு..! கட்டுப்பாடுகளுடன் சதுரகிரிக்கு 4 நாள்கள் பக்தர்களுக்கு அனுமதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2024 08:55 AM IST

இந்த ஆண்டின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல நான்கு நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலுக்கு மார்கழி அமாவாசை, தை அமாவாசையின் போது மழை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நான்கு நாள்கள் அனுமதி
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நான்கு நாள்கள் அனுமதி

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து மாதந்தோறும் நிகழும் அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷம் எட்டு நாள்கள் மட்டும் பகர்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுவர். அதில் மழை பொழிவு, வானிலை மோசமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும். கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் நாள்களில் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்து பகதர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

இதைத்தொடர்ந்து தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர், கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதில், பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவற்கும், ஆற்று பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அத்துடன், மழை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தாலோ அல்லது ஆற்று பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மார்கழி பிரதோஷம், பெளர்ணமிக்கு பகதர்கள் கோயிலுக்கு செல்ல முதலில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி மலையேற அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சதுரகிரி மலையேற மீண்டும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

பக்தர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தற்போது தை பிரதோஷ, பெளர்ணமியை முன்னிட்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரகிரிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்