Omni Bus Fares: மீண்டும் எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்! தீபாவளிக்கு இதுதான் ரேட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Omni Bus Fares: மீண்டும் எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்! தீபாவளிக்கு இதுதான் ரேட்!

Omni Bus Fares: மீண்டும் எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்! தீபாவளிக்கு இதுதான் ரேட்!

Kathiravan V HT Tamil
Oct 24, 2023 03:24 PM IST

“சென்னையில் இருந்து திருச்சிக்கு குறைந்த பட்ச கட்டணம் 1610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் 2430 ரூபாய்”

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 120 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்துகளை பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று (அக்.24) மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. 

பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுடன் கலந்து பேசி வெளியிடப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கும் குறைவாகவே ஆம்னிபஸ் டிக்கெட்டுகளை விற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

இதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு குறைந்த பட்ச கட்டணம் 1610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் 2430 ரூபாய்

சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் 1930 ரூபாய் - அதிகட்பட்ச கட்டணம் 3070 ரூபாய்

சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்ச கட்டணம் 2050 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3310 ரூபாய்

சென்னையில் இருந்து நெல்லைக்கு குறைந்தபட்ச கட்டணம் 2380 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3920 ரூபாய்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குறைந்தபட்ச கட்டணம் 2320 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3810 ரூபாய்

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் 2610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் 4340 ரூபாய்

சென்னையில் இருந்து சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 1650 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 2500 ரூபாய் என தெரிவித்துள்ளனர்.

அரசே இந்த தொகையை வசூலிக்க ஒப்புதல் தந்துள்ள நிலையில் இதற்கும் குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும், தீபாவளி நாளிலும் இதன் அடிப்படையில்தான் அம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் ஆம்னிபஸ் உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.