
Delhi Election Result Live Erode Bypoll Result : டெல்லி யாருக்கு? ஈரோடு ‘கிழக்கில்’ உதிக்குமா சூரியன்?
டெல்லி தேர்தல் முடிவுகள் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: இன்று டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அது தொடர்பான விபரங்களுடன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளையும் இங்கு அறியலாம்.
Sat, 08 Feb 202512:26 PM IST
டெல்லி தேர்தல் முடிவு : அன்னா ஹசாரே விமர்சனம்!
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், எவ்வளவோ எடுத்து செல்லியும் மது மற்றும் பணத்தின் மீதே அரவிந்த் கெஜ்ரிவால் கவனம் செலுத்தினார் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
Sat, 08 Feb 202512:05 PM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் பெற 25, 673 வாக்குகள் தேவையான நிலையில் 23,810 வாக்குகள் பெற்று நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார்.
Sat, 08 Feb 202511:40 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு இடைத்தேர்தலில் சந்திரகுமார் வெற்றி
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : திமுக வேட்பாளர் சந்திரகுமார் 17 ஆவது சுற்று முடிவில் 1,14,439 வாக்குகளை பெற்றுள்ளார். 23,810 வாக்குகள் பெற்று சீதாலட்சுமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சுமார் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது பேட்டரி பிரச்சனை இருந்த 3 பெட்டிகளில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
Sat, 08 Feb 202511:36 AM IST
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லியில் வெற்றி முகத்தில் பாஜக!
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளளது. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. 21 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
Sat, 08 Feb 202511:29 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : திமுக வேட்பாளர் சந்திரகுமார் 16 ஆவது சுற்று முடிவில் 1,08,305 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 22,992 வாக்குகள் பெற்று சீதாலட்சுமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சுமார் 85,313 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
Sat, 08 Feb 202511:06 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கில் நோட்டோ நிலவரம்
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 14 ஆவது சுற்று நிலவரப்படி 5,075 வாக்குகள் பெற்று நோட்டோ 3ஆவது இடத்தில் உள்ளது.
Sat, 08 Feb 202510:56 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : 14 ஆவது சுற்று நிலவரம்!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : திமுக வேட்பாளர் சந்திரகுமார் 14 ஆவது சுற்று முடிவில் 96,450 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 20,384 வாக்குகள் பெற்று சீதாலட்சுமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சுமார் 76,066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
Sat, 08 Feb 202510:41 AM IST
பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை - பெ.சண்முகம்!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல பிற மாநிலங்களில் இல்லை. அதனால்தான் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
Sat, 08 Feb 202510:07 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 வது சுற்று நிலவரம்!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : திமுக வேட்பாளர் சந்திரகுமார் 12 ஆவது சுற்று முடிவில் 83,191 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 17,679 வாக்குகள் பெற்று சீதாலட்சுமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சுமார் 65,512 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
Sat, 08 Feb 202509:49 AM IST
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லியில் ஆட்சி அமைக்கும் பாஜக - பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லியின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Sat, 08 Feb 202509:45 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : வெற்றியை உறுதி செய்தார் திமுக வேட்பாளர் சந்திர குமார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1,54, 657 வாக்குகள் பதிவான நிலையில் 50 சதவிகிதத்திற்கு மேல் திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெற்றுள்ளார். 11 ஆவது சுற்று முடிவில் 76,278 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 16,547 வாக்குகள் பெற்று நாதக வேட்பாளர் சீதாலட்சுமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சுமார் 59, 731 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
Sat, 08 Feb 202509:15 AM IST
டெல்லி தேர்தல் முடிவு : மக்களின் முடிவை முழு மனதாக தலைவணங்கி ஏற்றுகொள்கிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, "மக்களின் முடிவை முழு மனதாக தலைவணங்கி ஏற்றுகொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுங்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sat, 08 Feb 202509:02 AM IST
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லியில் காங்கிரஸ் 3 ஆவது முறையாக படுதோல்வி!
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லியில் கடந்த 1998 முதல் 2013 வரை டெல்லியை தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ் 2015, 2020, சட்டப்பேரவை தேர்தல்களில் பெரும் சரிவுடன் தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது 3வது முறையான படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Sat, 08 Feb 202508:48 AM IST
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லி சட்டப்பேரவை வெற்றி நிலவரம்!
டெல்லி தேர்தல் முடிவு :டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து 3 ஆவது முறையாக பூஜ்ஜியத்தில் உள்ளது காங்கிரஸ்
Sat, 08 Feb 202509:44 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : 64,710 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் சந்திர குமார் 64,710 வாக்குகள் பெற்று 51987,வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 12,723 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202509:42 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 46,632 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் சந்திர குமார் 58,910 வாக்குகள் பெற்று 46,632 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12,273 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202509:44 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : திமுக வேட்பாளர் சந்திர சேகர் தொடர்ந்து முன்னிலை!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் சந்திர குமார் 55,910 வாக்குகள் பெற்று 43,887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 12,023 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202507:44 AM IST
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லி முதலமைச்சர் அதிஷி வெற்றி
டெல்லி தேர்தல் முடிவு : டெல்லி முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். கல்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமேஷ் பிந்துரியை சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
Sat, 08 Feb 202509:42 AM IST
டெல்லி தேர்தல் முடிவு: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லி தேர்தல் முடிவு: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நியூடெல்லி தொகுதியில் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.
Sat, 08 Feb 202507:18 AM IST
டெல்லி தேர்தல் முடிவு: தேல்வியை ஒப்புக் கொள்கிறேன் - மணீஷ் சிசோடியா
டெல்லி தேர்தல் முடிவு: டெல்லி ஜங்க் புரா தொகுதியில் 600க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
Sat, 08 Feb 202507:16 AM IST
டெல்லி தேர்தல் முடிவு: டெல்லியில் பாஜக முன்னிலை அதிர்ச்சி தருகிறது - திருமாவளவன்!
டெல்லி தேர்தல் முடிவு: "டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது.. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Sat, 08 Feb 202509:44 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : 34,336 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் சந்திர குமார் 43,488 வாக்குகள் பெற்று 34,336 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 9152 பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202507:01 AM IST
டெல்லி தேர்தல் முடிவுகள் : டெல்லியில் பாஜக தொடந்து முன்னிலை!
டெல்லி தேர்தல் முடிவுகள் : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 48
ஆம் ஆத்மி - 22
காங்கிரஸ் - 0
Sat, 08 Feb 202509:44 AM IST
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : திமுக தொடர்ந்து முன்னிலை
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு : ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் சந்திர குமார் 37,001 வாக்குகள் பெற்று 29,333 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 7,668 பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202507:00 AM IST
டெல்லி தேர்தல் முடிவுகள்: டெல்லி சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தற்போதைய முன்னிலை நிலவரம்!
டெல்லி தேர்தல் முடிவுகள் : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 46
ஆம் ஆத்மி - 24
காங்கிரஸ் - 0
Sat, 08 Feb 202506:13 AM IST
Delhi Election Result : ஆம் ஆத்மி முதல்வர் அதிஷி பின்னடைவு
Delhi Election Result : டெல்லியில் ஆம் ஆத்மி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி முதல்வர் அதிஷி பின்னடைவை சந்தித்துள்ளனர். மணீஷ் சிசோடியா முன்னிலை வகிக்கிறார்.
Sat, 08 Feb 202506:20 AM IST
Delhi Election Result : டெல்லியில் காங்கிரஸ் நிலவரம்!
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி 29 இடங்களில் பின்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.
பாஜக - 41
ஆம் ஆத்மி - 29
காங்கிரஸ் - 0
Sat, 08 Feb 202509:44 AM IST
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கில் 24,854 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் சந்திர குமார் 30,788 வாக்குகள் பெற்று 24,854 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 5,934 பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202505:34 AM IST
Delhi Election Result : ஆம் ஆத்மி தொடர்ந்து பின்னடைவு
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 40
ஆம் ஆத்மி -30
காங்கிரஸ் -0
Sat, 08 Feb 202509:44 AM IST
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கில் தபால் வாக்குகளில் நாதக-வை பின்னுக்கு தள்ளிய நோட்டா
Erode Bypoll Result live : ஈரோடு சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 197 வாக்குகள் திமுகவின் சந்திர குமாருக்கும், 13 வாக்குகள் நாம் தமிழருக்கும், 18 வாக்குகள் நோட்டாவிற்கும் பதிவாகி உள்ளது.
Sat, 08 Feb 202505:23 AM IST
Delhi Election Result : டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 39
ஆம் ஆத்மி -31
காங்கிரஸ் -0
Sat, 08 Feb 202509:43 AM IST
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கில் திமுக தொடர்ந்து முன்னிலை
Erode Bypoll Result live : திமுக வேட்பாளர் சந்திர குமா 26,492 வாக்குகள் பெற்று 23,315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 3,177 பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202505:07 AM IST
Delhi Election Result : டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முன்னி
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 43
ஆம் ஆத்மி -27
காங்கிரஸ் -0
Sat, 08 Feb 202504:55 AM IST
Delhi Election Result : அரவிந்த கெஜ்ரிவால் முன்னிலை
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் 343 வாக்குகள் வித்தியாசத்தில் 6,442 வாக்குகள் பெற்று மீண்டும் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 6,099 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 08 Feb 202509:42 AM IST
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கில் இரண்டாம் சுற்றில் திமுக முன்னிலை!
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது.
திமுக வேட்பாளர் சந்திர குமார் 20,873 வாக்குகள் பெற்று 18,639 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sat, 08 Feb 202504:25 AM IST
Delhi Election Result : டெல்லியில் காங்கிரஸ் கணக்கை தொடங்குமா!
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 42
ஆம் ஆத்மி -28
காங்கிரஸ் -0
Sat, 08 Feb 202505:11 AM IST
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கில் 6,951 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை!
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தொடர்ந்து திமுக முன்னிலை வகிக்கிறது.
திமுக 8,963
நாம் தமிழர் கட்சி 2,012
வித்தியாசம் 6,951
Sat, 08 Feb 202503:59 AM IST
Delhi Election Result Live : அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னிலை
Delhi Election Result Live : தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Sat, 08 Feb 202503:49 AM IST
Delhi Election Result Live Erode Bypoll Result : தலைநகர் டெல்லியில் பாஜக முன்னிலை
Delhi Election Result : தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக - 42
ஆம் ஆத்மி -23
காங்கிரஸ் -1
Sat, 08 Feb 202505:11 AM IST
Erode Bypoll Result : வி.சி. சந்திர குமார் முன்னிலை
Erode Bypoll Result : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் வி.சி சந்திர குமார் 6,880 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
Sat, 08 Feb 202503:31 AM IST
ஈரோடு கிழக்கில் உதிக்கத் தொடங்கிய திமுக! நாம் தமிழர் பின்னடைவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
Sat, 08 Feb 202503:41 AM IST
Delhi Elections 2025: ஆம் ஆத்மியின் முக்கிய நபர்களே பின்னடைவு
DelhiElections2025: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி, ஜங்புரா தொகுதியில் மணீஷ் சிசோடியா ஆகியோர் தபால் வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
Sat, 08 Feb 202503:07 AM IST
Delhi Election Result: டெல்லியில் ஓங்கும் பாஜக!
Delhi Election Result: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
Sat, 08 Feb 202502:43 AM IST
வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது
ErodeEastByElection: டெல்லி சட்டப்பேரவை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது
Sat, 08 Feb 202502:27 AM IST
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வருகை!
Erode Bypoll Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வருகை தந்துள்ளார்.
Sat, 08 Feb 202502:10 AM IST
போட்டியிடுபவர்களின் விவரம்!
Delhi Election Result Live : புதுடெல்லியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்ஷித் போட்டியிடுகின்றனர். கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அல்காலம்பா, பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிடுகின்றனர். ஜாங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தி தொகுதியில் சத்யேந்தர் ஜெயின் போட்டியிடுகின்றனர்.
Sat, 08 Feb 202501:53 AM IST
தபால் வாக்குஎண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது!
Erode Bypoll Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தபால் வாக்குஎண்ணும் பணி காலை 8 மணிக்கும், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 8.30 மணிக்கும் தொடங்குகிறது.
Sat, 08 Feb 202501:37 AM IST
ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும்!
Delhi Election Result Live : டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என பிற்பகலில் தெரிந்துவிடும்.
Sat, 08 Feb 202501:21 AM IST
67.97 சதவீத வாக்குகள் பதிவு!
Erode Bypoll Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்துடன், தபால் வாக்குகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் என 246 பேரும், ராணுவத்தில் பணியாற்றும் 4 பேர், சிறை கைதி ஒருவர் என 251 வாக்குகள் பதிவாகின.
Sat, 08 Feb 202501:11 AM IST
மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தனர்!
Erode Bypoll Result Live : ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. இதில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தனர்.
Sat, 08 Feb 202501:05 AM IST
வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்குகிறது!
Delhi Election Result Live : தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.
Sat, 08 Feb 202501:01 AM IST
டெல்லியில் 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின!
Delhi Election Result Live : டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின.
Sat, 08 Feb 202512:58 AM IST
காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!
Erode Bypoll Result : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Fri, 07 Feb 202512:20 PM IST
திமுக-நாம் தமிழர் இடையே போட்டி
Erode Bypoll Result live : ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சிகள் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், திமுகவை எதிர்கொண்டுள்ளது நாம் தமிழர் கட்சி
Fri, 07 Feb 202512:19 PM IST
ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை
Erode Bypoll Result live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது
Fri, 07 Feb 202512:18 PM IST
டெல்லியிங் மும்முனை போட்டி
Delhi Election Result Live: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி இருந்தாலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
Fri, 07 Feb 202512:17 PM IST
இன்று டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை
Delhi Election Result Live: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது