தலைப்பு செய்திகள்: கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ்! அன்புமணி வேதனை பேட்டி! மதுரையில் மதநல்லிணக்க பேரணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ்! அன்புமணி வேதனை பேட்டி! மதுரையில் மதநல்லிணக்க பேரணி!

தலைப்பு செய்திகள்: கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ்! அன்புமணி வேதனை பேட்டி! மதுரையில் மதநல்லிணக்க பேரணி!

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 07:18 AM IST

சன் டிவி பங்குகள் விவகாரம் தொடர்பாக கலாநிதிமாறனுக்கு தயாநிதிமாறன் நோட்டீஸ், பாமக தலைவர் பதவி குறித்து அன்புமணி பேச்சு, பாஜகவின் முருகபக்தர்கள் மாநாடு குறித்து திருமாவளவன் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ்! அன்புமணி வேதனை பேட்டி! மதுரையில் மதநல்லிணக்க பேரணி!
தலைப்பு செய்திகள்: கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ்! அன்புமணி வேதனை பேட்டி! மதுரையில் மதநல்லிணக்க பேரணி!

1.தயாநிதி- கலாநிதிக்கு நோட்டீஸ்

சன் டிவி பங்கு விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல். சன் டிவி பங்குகளை 2003 ஆம் ஆண்டு முதல் கையாண்ட விதத்தில் இருந்து அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2.நிம்மதியை இழந்துவிட்டேன் - அன்புமணி 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தான் தலைவர் பதவியை ஏற்ற நாளிலிருந்து மனநிம்மதியை இழந்துவிட்டதாகவும், சமீபத்திய இரண்டு மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் நிர்வாகிகளிடையே வேதனை தெரிவித்துள்ளார்.

3.திமுக காரணம் இல்லை - ராமதாஸ்

பா.ம.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு திமுக காரணம் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் மன்னிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, "போக போகத்தான் தெரியும்" என்று ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

4.பாஜக மீது திருமா விமர்சனம் 

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக மதுரையில் மத நல்லிணக்கக் கூட்டமைப்பினர் சார்பில்மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. முருகபக்தர்கள் மாநாடுபா.ஜ.க.வை வளர்ப்பதற்காகவே நடத்தப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

5.மதுரை மக்களின் மத நல்லிணக்கம்

மதுரையில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குனர் அமீர் ”மதுரை மண்ணின் அடையாளம் மத நல்லிணக்கமே” என பேட்டி. மதுரை மக்களிடம் அவ்வளவு சீக்கிரம் மதவெறுப்பு அரசியலை உருவாக்க முடியாது என்றும், மதுரை மக்கள் அதற்கு அடிபணிய மாட்டார்கள் என்றும் கருத்து.

6.ஆன்மீகத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் 

முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியில் ஆன்மீகத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும், முதலமைச்சருக்கு பக்தி இல்லை என்றும் கருத்து.

7.தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் நன்னீராட்டு விழா நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, தமிழ் வேத மந்திரம் நிச்சயமாக குண்டத்தில் ஒலிக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில்.

8.‘தமிழிலும்’ குடமுழுக்கு என்பது அவமானம்

தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்; ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் அறிவிப்பை ஏற்க முடியாது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னை தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. 

9.எழும்பூர் ரயில் நிலைய புனரமைப்பு 

இன்று முதல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

10.மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.