ஃபெங்கல் புயல் எதிரொலி: தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பாருங்க
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஃபெங்கல் புயல் எதிரொலி: தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பாருங்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பாருங்க

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 27, 2024 07:46 AM IST

ஃபெங்கல் புயல் தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்காலுக்கும் மிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுவடைந்து,

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் இன்று புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.

ஃபெங்கல் புயல்

ஃபெங்கல் புயல் தீவிரமடைவதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை காலை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துதுள்ளது.

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்காலுக்கும் மிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புதன்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், வியாழன் அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆந்திராவில் வியாழன் முதல் சனிக்கிழமை வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நேரத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, வடக்கு நோக்கி நகர்ந்து, இலங்கையில் திருகோணமலை கடற்கரையில் இருந்து 240 கிமீ தொலைவிலும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து 520 கிமீ தொலைவிலும், புதுச்சேரி கடற்கரையில் இருந்து 640 கிமீ தொலைவிலும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்,விழுப்புரம்,திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருச்சி, ராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமான சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடலூரில் கடல் சீற்றம்

கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.